Published:Category:

சாலையில் கிடந்த பெண் சடலம்: பல வாகனங்கள் ஏறிச் சென்ற அவலம்..!

#MIvDC

சாலையில் கிடந்த பெண் சடலம்: பல வாகனங்கள் ஏறிச் சென்ற அவலம்..!

கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் சோதனை சாவடி அருகே கடந்த திங்கட்கிழமை காலை சாலையில், சிதைவடைந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், பீளமேடு போலீசார் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் சடலம் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், சம்பவத்தன்று காலை 5.45 மணி அளவில் கார் ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சடலம் கிடந்த இடத்திற்கு 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே அந்தப் பெண்ணின் ஆடைகள் கிடந்து உள்ளன.

மேலும் அந்த சடலத்தின் மீது பல வாகனங்கள் ஏறிச் சென்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால் ஏதேனும் காரில் அந்தப் பெண் சிக்கி இழுத்து வரப்பட்டிருக்கலாமோ என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து சிசிடிவியில் பதிவாகியுள்ள காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தபோது, அந்தக் கார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

கார் மற்றும் அதன் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று பெண்ணின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அதில், இறந்த பெண்ணுக்கு 65 வயது இருக்கலாம் எனவும், கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

#MIvDC

ரோம் சாசனத்தில் கையெழுத்திடுங்கள். தமிழர் தாயக சங்கம்

Published:Category:

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

#MIvDC

வவுனியாவில் இருபது நாட்களில் 2222 பேருக்கு கொரோனா தொற்று : 106 பேர் மரணம்.

Published:Category:

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

#MIvDC

வவுனியாவில் 35 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கொரோனாவிற்கு பலி.

Published:Category:

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

#MIvDC

வவுனியாவில் சீமெந்துக்கும் தட்டுப்பாடு.

Published:Category:

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

#MIvDC

ஒன்ராறியோவில் மெதுவாக குறைந்து கொண்டே செல்லும் நோய்த்தொற்றுகளின் சராசரி..!

Published:Category:

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

#MIvDC

அனல் பறக்கும் கனேடிய தேர்தல் களம் - வரலாற்றை மாற்றி எழுதப்போகிறதா இன்றைய தேர்தல்..?

Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

Published:Category:

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

#MIvDC

வவுனியாவில் 5பேர் கோரோனாவிற்கு பலி.

Published:Category:

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

#MIvDC

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவன் பலி - மனைவி பொலிஸில் சரண்.

  • Thedipaar