Published:Category:

நீதியைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? நகரசபை உறுப்பினர் எம்எம் மஹ்தி கேள்வி?

#MIvDC

நீதியைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைமைகள் தவறுகின்றார்களா? நகரசபை உறுப்பினர் எம்எம் மஹ்தி கேள்வி?

அண்மைய காலங்களாக எந்த ஒரு அடிப்படையும் இன்றி அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கலவரங்களால் அநியாயமாக பாதிக்கப்பட்டு தமது சொத்துக்களையும், பொருளாதாரத்தையும், உயிர்களையும் இழந்தவர்களுக்கு உரிய நீதியை பெற்றுக் கொடுக்க முஸ்லீம் தலைவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம். எம். மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஊடகங்களுக்கு இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,,,

இலங்கை வரலாற்றில் காலம் காலமாக பல்வேறு திட்டமிட்ட அழிவுகளுக்கு அநியாயமாக முகம் கொடுத்து வருகின்ற முஸ்லிம் சமூகம் தமது பொருளாதாரத்தை, உயிர்களை, சொத்துக்களை இழந்து கொண்டே வருகின்றார்கள்.

அவ்வாறான இழப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு அவர்களது வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற அரசியல் தலைமைகள், பாராளுமன்ற பிரதிநிதிகள் நியாயமான நீதியையும் இழப்பீடுகளையும் பெற்றுக் கொடுக்க தவறி வருகின்றனர்.

அந்த அடிப்படையில் அண்மை காலங்களில் அம்பாறை கருத்தடை கொத்து, கண்டி- திகன பிரச்சினை, ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அரங்கேற்றப்பட்ட பேரழிவுகள், வைத்தியர் சாபியினது சம்பவம் போன்றவற்றில் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லீம்களுக்கு எதிராக அநியாயக் கலவரங்களை வன்முறையாளர்கள் அரங்கேற்றினர்.

அக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்திற்குக்கு உரிய நீதியையும் அவற்றுக்கான இழப்பீடுகளையும் பெற்றுக்கொடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது முடியாத போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கவனத்திற்கேனும் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கட்சித் தலைவர்களையும் அரசோடு இணக்க அரசியலை செய்து வருகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

#MIvDC

டிஜிட்டல் வசதிகளுடன்கூடிய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை இலங்கை வங்கி நகர கிளை திறந்து வைப்பு.

Published:Category:

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

#MIvDC

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் காயம்.

Published:Category:

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

உரத்தினை வழங்குமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

#MIvDC

கிளாலி பகுதியில் தனியார் காணியை அளவீடு செய்து கடற்படைக்கு வழங்க எடுத்த முயற்சி முறியடிப்பு.

Published:Category:

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

#MIvDC

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்.

Published:Category:

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

#MIvDC

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

Published:Category:

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

#MIvDC

அறிவித்தலின்றி பயணித்த புகையிரதம் - மாடுகள் பலி.

Published:Category:

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#MIvDC

பசளையினைப்பெற்றுக்கொள்ள அனைவரும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழப்பு.

Published:Category:

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

#MIvDC

மீனவர்களுக்கான அவசர அறிவித்தல்.

  • Thedipaar