Published:Category:

காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல் போன 26 வயதுடைய யுவதி மீட்பு.

#MIvDC

காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்று காணாமல் போன 26 வயதுடைய யுவதி மீட்பு.

தாயுடன் கடந்த 5 நாட்களுக்கு முன் நுவரெலியா டன்சினன் பகுதியில் காட்டுக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற 26 வயதுடைய யுவதி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யுவதி நுவரெலியா கிகிலியாமான காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் நுவரெலியாவத்த கீழ் பிரிவில் வசித்த ஜெயபாலன் கற்புகதாரணி என்ற 26 வயது யுவதியாவார்.

நுவரெலியா இராணுவ முகாம் அதிகாரிகள், நுவரெலியா பொலிஸார் மற்றும் டன்சினன் தோட்டத் மக்கள் கடந்த 5 நாட்களாக இவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது சாந்திபுர பிரதேச மக்கள் கிகிலியாமான காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி காட்டில் கூக்குரல் எழுப்பியுள்ளார் அதன் போது இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

5 நாட்கள் காட்டில் தனியாக பசியுடன் அலைந்த யுவதிக்கு பிரதேச மக்கள் உணவுகளை வழங்கிய பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காணாமல் போயிருந்த யுவதி தெரிவிக்கையில், தாயுடன் டன்சினன் தோட்டத்தில் இருந்து விறகு வெட்ட சென்ற நிலையில் தாயிடமிருந்து வழி தவறி பல பாதைகளில் அங்கும் இங்கும் அலைந்து வீடு திரும்ப முடியாமல் தவித்ததாகவும், இரவு வேளைகளில் அச்சம் காரணமாக எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

#MIvDC

மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் பகுதியில் கிஃப்ட் கார்டு மோசடி!

Published:Category:

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

#MIvDC

நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் - தொடர்ந்து குவியும் குவியும் நோயாளிகள்!

Published:Category:

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

#MIvDC

கடனை திருப்பி செலுத்த முடியாததால் உகாண்டாவின் விமான நிலையம் சீனா வசம் செல்கிறது!

Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

Published:Category:

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

#MIvDC

அடுத்த அலையின் ஆரம்பமா? தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா!

Published:Category:

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

#MIvDC

ஆபாசபடம்: அமெரிக்காவில் படிக்கும், சென்னை மாணவியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்!

Published:Category:

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

#MIvDC

மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் இன்றுடன் நிறைவு!

Published:Category:

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

#MIvDC

இருசக்கர வாகனத்தை அடகு வைத்து குடித்த கணவன் - குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

Published:Category:

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

#MIvDC

மேற்கு வங்கத்தில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழப்பு.

Published:Category:

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

#MIvDC

ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு.

  • Thedipaar