Published:Category:

தமிழுக்கென்று, தமிழருக்கென்று : உலக அளவில் முத்திரை பதித்த Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா..!

#MIvDC

தமிழுக்கென்று, தமிழருக்கென்று : உலக அளவில் முத்திரை பதித்த Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா..!

Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வெற்றிகரமாக இரண்டாவது வருடமாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

தமிழுக்கென்று, தமிழருக்கென்று ஒரு திரைப்பட விழா வெளிநாடுகளில் நடைபெறுவதில்லையே என்ற ஏக்கத்தை Torontoவில் நடைபெற்ற இந்த திரைப்பட விழா போக்கி இருக்கிறது. தமிழ் திரைப் படங்களுக்கென்று ஒரு திரைப்பட விழா வெளி நாடுகளில் நடைபெறுவதில்லையே என்ற குறையை Torontoவில் நடைபெற்ற இந்த திரைப்பட விழா நிவர்த்தி செய்திருக்கிறது.

செந்தூரன் அவர்கள் ஒரு சமூக ஆர்வலர், கலைஞர், பிரபல வர்த்தகப் பிரமுகர் என்று பன் முகங்களைக் கொண்டவர். சமூகப் பிரச்சனைகளில் ஆர்வம் கொண்டவர். அவருடன் யாராவது உரையாடினால் அந்தப் உரையாடலுக்குள் பல சமூகப் பிரச்சினைகள் புகுந்து விடும்.

தமிழனுக்கென்று ஒரு அந்தஸ்தில்லையே, தமிழனுக்கென்று ஒரு அங்கீகாரம் இல்லையே என்றெல்லாம் தனது ஏக்கங்களை பகிரங்கமாக வெளிவிடும் தன்மை கொண்டவர். இதே போன்றதொரு அவருடைய ஏக்கம் தான், தமிழர்களின் திறமைகளை, கலைத்திறமைகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்து வர முடியாமல் இருக்கிறதே - பறை சாற்ற முடியாமல் இருக்கிறதே என்பதாக இருந்தது.

செந்தூரனின் இந்த ஏக்கத்தின் தாக்கத்தின் வெளிப்பாடு தான், தமிழ் படங்களுக்கென்ற இந்த சர்வதேச திரைப்பட விழாவாகும். தமிழர்களைத் தாயகமாக கொண்ட நாடுகளை விட, ஒரு மேற்கத்திய நாட்டிலே, தமிழ் திரைப்பட விழா என்பது சாத்தியமா என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களை நாண வைத்து இரண்டாவது வருடமாக வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்திருக்கிறார். முயற்சி எடுத்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதனை தமிழன் செந்தூரன் நிரூபித்திருக்கிறார்.

இந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் போட்டியிடுவதற்காக மொத்தம் 283 திரைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவற்றிலே திரைப்பட விழாவில் திரையிடுவதற்கென்று நடுவர்களால் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெர்மனி உட்பட 15 நாடுகளில் இருந்து கிடைத்திருந்த 56 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.

சர்வதேச தமிழ் திரைப்பட விழா ஒன்றுக்கு அதன் வளர்ச்சியின் 2வது ஆண்டிலேயே 16 நாடுகளில் இருந்து திரைப்படங்கள் பங்கு பற்றியிருப்பது மாபெரும் வெற்றியாகும்.

இவற்றினுள், தமிழர்களே வாழாத அல்லது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பிரேசில், போர்த்துக்கல், ஈரான், எகிப்து, ஜப்பான், பின்லாந்து, ஐக்கிய அரபு ராஜ்யம் போன்ற நாடுகளில் இருந்தும் திரைப்படங்கள் போட்டிக்கு கிடைத்திருப்பது 2வது ஆண்டில் தத்தித் தவழ்ந்து கொண்டிருக்கின்ற Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழாவின் வெற்றிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு.

போர்த்துக்கல் நாட்டில் இருந்தும் திரைப்படம் ஒன்று இந்த விழாவுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்தாலும், அது இறுதி விழாவிலே திரையிடுவதற்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை.

இந்தியாவில் இருந்து மட்டும் 18 திரைப்படங்களும், அமெரிக்காவில் இருந்து 8 திரைப்படங்களும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கனடா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து தலா மூன்று திரைப் படங்களும், இலங்கை மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா 2 திரைப்படங்களும் இந்த திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தன. இவற்றில் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆர்யா நடித்த “மகாமுனி” திரைப்படமும் அடங்கும்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Woodbine அரங்கத்தில் காலையிலிருந்து மாலை வரை தொடர்ச்சியாக திரையிடப் பட்டிருந்தன.

இந்தத் திரைப்பட விழாவில் இரண்டு நாட்களிலும் திரையிடப்பட்ட அத்தனை படங்களையும் பார்வையிடுவதற்கு ஆக மொத்தம் 50 டொலர்கள் மட்டுமே கட்டணமாக அறவிடப் பட்டிருந்தது. அதற்காக Pass ஒன்றும் வழங்கப் பட்டிருந்தது. இந்த Passஇனைப் பாவித்து, பார்வையிட வருபவர்கள் எத்தனை திரைப்படங்களையும் பார்வையிடலாம், எத்தனை தடவையும் வந்து போகலாம் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவுக்கான ஆரம்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு விமர்சையாக நடைபெற்றது. Covid-19 பிரச்சனை காரணமாக அயல் நாடான அமெரிக்காவைத் தவிர்த்து வேறு எந்த வெளிநாடுகளில் இருந்தும் எவராலும் இந்த வண்ணமிகு திரைப்பட ஆரம்ப விழாவில் கடந்த வருடத்தைப் போல கலந்து கொள்ள முடியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம்.

மிகச் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை இயக்குனர் வைகறை பாலனின் “சீயான்கள்” திரைப்படம் தட்டிக் கொண்டது. இந்த வருடத்திற்கான சிறந்த இயக்குனர் விருதினை மகாமுனி திரைப்படத்தின் இயக்குனர் சாந்தகுமார் தட்டிக் கொண்டுள்ளார். மிகச் சிறந்த Crime Thriller திரைப்படத்திற்கான விருதினை இயக்குனர் சரணின் “என்னவள்” திரைப்படம் தட்டிக் கொண்டது.

மிகச் சிறந்த குறும் படங்களாக “சிவனும் மோகினியும்”, “பன்மை” மற்றும் “பெருங்களத்தூர் பி ராஜகோபால்” ஆகிய குறும் படங்கள் தட்டிக் கொண்டுள்ளன. மிகச் சிறந்த குறும் பட இயக்குனர் விருதுகளை Sorry குறும் படத்தின் இயக்குனர் சத்யராஜ்குமாரும், “யாதுமாகி நின்றாய்” குறும்படத்தின் இயக்குனர் நிதிஷ் பிரபூஜித்தும் தட்டிக் கொண்டார்கள்.

சிறந்த துணை நடிகைக்கான விருது மகிமா நம்பியாருக்கும், சிறந்த வளர்ந்து வரும் நடிகைக்கான விருது "செந்நாய்" திரைப்படத்தில் நடித்த செம்மலர் அன்னத்துக்கும், சிறந்த அறிமுக ஆண் நடிகருக்கான விருதுகள் “மேதகு” திரைப்படத்தில் நடித்த குட்டிமணிக்கும், “Short Cut” திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதருக்கும் கிடைத்திருக்கின்றன.

பார்வையாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, “சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்கான” விருது “மேதகு” திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. இதன்படி “மேதகு” திரைப்படத்திற்கு மொத்தம் இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன.

தமிழ் தாயகங்களைத் தவிர்த்து மேற்கத்தைய நாடு ஒன்றில், சர்வதேச தமிழ் திரைப்பட விழா என்ற கருவை செயல்படுத்தி சாதித்துக் காட்டிய செந்தூரன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த வருடம் தொற்றுநோய் பிரச்சனை எதுவும் இல்லாமல் இந்த விழா மிகப் பெரும் எடுப்பில் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன் என கிருஷ்ணலிங்கம் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

#MIvDC

கைக்குழந்தையுடன் கோரிக்கை வைத்த பெண் எம்.பி.

Published:Category:

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

#MIvDC

தெற்கு ஸ்பெயினின் பல பகுதிகளில் வெள்ளம்.

Published:Category:

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

#MIvDC

இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை.

Published:Category:

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

#MIvDC

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.

Published:Category:

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

#MIvDC

மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி.

Published:Category:

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

#MIvDC

வவுனியா மாவட்ட தாதியர் சங்கத்திற்கு நிதியுதவி செய்த ஊடகவியலாளர்

Published:Category:

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

#MIvDC

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளுக்கு இறப்பு சான்றிதழ் விடயத்தை கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

Published:Category:

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

#MIvDC

மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும்.

Published:Category:

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

#MIvDC

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 21 பேர் 9ஏ சித்தி - 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்க தகுதி

Published:Category:

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

#MIvDC

ஒரு போதும் நாம் உள்நாட்டு பொறிமுறையை நம்பத் தயாரில்லை....! எம் கே சிவாஜிலிங்கம்

  • Thedipaar