Published:Category:

மும்பைக்கு அருகே புதிய பங்களா வாங்கும் தீபிகா! விலை எவ்வளவு தெரியுமா?

#MIvDC

மும்பைக்கு அருகே புதிய பங்களா வாங்கும் தீபிகா! விலை எவ்வளவு தெரியுமா?

பெங்களூருவை சேர்ந்த நடிகை தீபிகா படுகோன் பாலிவுட் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை தீபிகா படுகோன் தற்போது சுமார் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். புதிய படங்களுக்கு சம்பளமாக 10 முதல் 12 கோடி வரை வாங்குகிறார். இவர் பாலிவுட்டின் சிறந்த ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த ரன்வீர் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதனிடையே மும்பையில் பிரபாதேவி ஏரியாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 4 பெட்ரூமுடன் கூடிய ஃபிளாடில் இருவரும் வசித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூருவிலும் விலை உயர்ந்த அப்பார்ட்மென்ட் ஒன்றையும் இந்த ஜோடி வாங்கியது.

இவர்களது சொத்து மதிப்பு சுமார் 600 கோடிக்கும் மேல் இருக்கலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதியினர் மும்பைக்கு அருகே ரூ. 22 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அளித்த தகவலின் படி, தங்கள் நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து இந்த பங்களாவை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்காக இருவரும் ரூ. 1.32 கோடி முத்திரை கட்டணமாக செலுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் பதிவுத் துறை அலுவலகத்துக்கு சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. 5 படுக்கையறைகள் கொண்ட இந்த பங்களா சுமார் 9,000 சதுர மீட்டர் அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar