Published:Category:

அமெரிக்கா ட்ரோன் மூலம் வீசிய வெடிகுண்டில் கருகிப்போன 2 வயது குட்டி மலர்..!

#MIvDC

அமெரிக்கா ட்ரோன் மூலம் வீசிய வெடிகுண்டில் கருகிப்போன 2 வயது குட்டி மலர்..!

காபுல் ட்ரோன் தாக்குதலில் தவறு செய்துவிட்டோம் என ஒப்புக்கொண்டிருக்கும் அமெரிக்கா அந்த தாக்குதலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

காபுல் விமான நிலையம் அருகே இரண்டு இடங்களில் அமெரிக்கர்களை குறிவைத்து மனிதவெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் கோர்சான் தீவிரவாத அமைப்பினர் நடத்தினர். இதில் 12 அமெரிக்கர்கள் உட்பட 72 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு காரணமான ஐஎஸ் கோர்சான் அமைப்பினர் மீண்டும் ஒரு முறை காபுல் விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களின் இருப்பிடத்தை குறிவைத்து ட்டோன் தாக்குதலை அமெரிக்க படையினர் நிகழ்த்தினர்.

இத்தாக்குதலில் ஐஎஸ் அமைப்பினர் யாரும் பாதிக்கப்படவில்லை, அவர்களுக்கு பதிலாக அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் என 10 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இந்நிலையில் காபுல் ட்டோன் தாக்குதல் எங்களின் தவறுதான் என அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்ட் பிரிவின் ஜெனரல் கென்னத் மெக்கன்சி ஒப்புதல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் கூறுகையில், ட்ரோன் தாக்குதல் ஒரு சோகமான தவறு என குறிப்பிட்டார்.

“ஆகஸ்ட் 29ம் தேதி வெள்ளை நிற டொயோட்டா கொரோல்லா காரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எங்களின் புலனாய்வு பிரிவினர் சந்தேகித்தனர். அந்தக் காரின் நடமாட்டத்தை வைத்து அதில் இருந்தவர்கள் காபுல் விமான நிலையத்தை தகர்க்க திட்டமிட்டவர்கள் என நம்பினோம், 8 மணி நேர துரத்தலுக்கு பிறகு அந்தக் காரை குறிவைத்து தான் ட்ரோன் தாக்குதல் நடந்தது. ஆனால் பரிதாபமாக 7 குழந்தைகள் உட்பட 10 அப்பாவிகள் அத்தாக்குதலில் பலியாகினர்.

எங்கள் புலனாய்வு அமைப்பின் பெரிய தவறு இது என கூறியிருக்கும் மெக்கன்சி, அந்தக் காரில் வெடிபொருட்கள் இருந்ததாக நம்பப்பட்டதால் அதை செய்ததாக கூறினார்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியிருக்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar