Published:Category:

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

#MIvDC

வவுனியாவில் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதால் பண்ணையில் வழங்கப்பட்ட பால் உடன் நிறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா அரச விதை உற்பத்திப்பண்ணையில் வாடிக்கையாளர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வந்த பால் அங்கு இடம்பெற்ற முறைகேடுகளை சுட்டிக்காட்டியதற்காக திடீரென்று எவ்விதமான முன்னறிவித்தல்களும் இன்றி உடன் நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது . 


தற்போதைய கொவிட் தொற்று நிலைமைகள் காரணமாக பால் மாவிற்காக தட்டுப்பாடுகள் நிலவி வரும் இக்காலப்பகுதியில் சிறுவர்கள் , முதியவர்களின் தேவைகளுக்காக வாடிக்கையாளர் ஒருவரினால் குறித்த அரச விதை உற்பத்திப்பண்ணையில் பால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது . 

எனினும் அண்மைய சில நாட்களாக எட்டு மணிக்கு வழங்கப்பட வேண்டிய பால் பத்து மணிக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறித்து அங்கு கடமையிருந்த தனியார் பாதுகாப்பு ஊழியருக்கு தெரிவிக்கப்பட்டு நேரகாலத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இதனால் சிறுவர்கள் உட்பட முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியவில்லை . பயணத்தடை காலத்தில் வீண் அலைச்சல்களையும் தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாடிக்கையாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் குறித்த வாடிக்கையாளரின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய பண்ணையின் உதவி முகாமையாளரினால் உங்களுக்கு வழங்கப்பட்ட பால் நிறுத்தப்பட்டுவிட்டது . உங்களுக்கு பால் வழங்க முடியாது என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது . 

இவ்வாறு பால் பண்ணையில் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டியதற்காக தான் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச விதை உற்பத்திப்பண்ணையால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தில் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் குறித்த வாடிக்கையாளரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . 

இவ்விடயம் குறித்து மாவட்ட விவசாயத்திணைக்கள பணிப்பாளரிடம் முறையிட்டபோதும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar