Published:Category:

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

#MIvDC

எதிர்கட்சிகளின் வியூகங்களை தவிடு பொடியாக்கிய ஜஸ்டின் ட்ரூடோ : மூன்றாவது முறையாக பிரதமராவது அவ்வளவு எளிதல்ல..!

நடந்த முடிந்த கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமர் ஆசனத்தை கைப்பற்றியுள்ளார். 

2015-ம் ஆண்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 6 ஆண்டுகளில் சந்திக்கும் 3-வது பொதுத் தேர்தலாகும். கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் ட்ரூடோவின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் அதற்குள் முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று 338 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் குயிபெக் மாகாணத்தில் பாப்பிநாவ் தொகுதியில் போட்டியிட்ட ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கனாடாவில் கடந்த மாதம் கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே திடீரென தேர்தலை லிபரல் கட்சித் தலைவர் ட்ரூடோ அறிவித்தார். கரோனா பரவலை வெற்றிகரமாகச் சமாளித்தது, காலநிலை மாற்றம், அனைவருக்கும் வீடு, துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஒடுக்கியது உள்ளிட்ட பல்வேறு சவால்களை வெற்றிகரமாகச் சமாளித்ததால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருப்பதால், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்க பிரதமர் ட்ரூடோ தயாரானார்.

இருந்தாலும் இறுதிநேரத்தில் எதிர்கட்சிகள் பிரதமருக்கு எதிராக எதிர்மறை கருத்துக்கணிப்புகளையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தன. அதையெல்லாம் தாண்டி ஜஸ்டின் வெற்றி இலக்கை எட்டியுள்ளார். 

தேர்தலில் மக்கள் வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “லிபரல் கட்சி மீது நம்பிக்கை வைத்து, ஒளிமயமான எதிர்காலத்தைத் தேர்வு செய்து வாக்குகளைப் பதிவு செய்த கனடா மக்களுக்கு நன்றி. கரோனா தொற்றை நாங்கள்தான் அழிக்கப் போகிறோம், கனடாவை நாங்கள்தான் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட உள்ள 31,339 ஏக்கர் பெரும் போகத்திற்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்.

Published:Category:

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

#MIvDC

முல்லைத்தீவில் பல இடங்களில் சட்டத்தினை அமுல்படுத்த சுவரொட்டிகள்!

Published:Category:

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

#MIvDC

புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் வசமிருந்த 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Published:Category:

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

#MIvDC

இந்த அரசாங்கம் ஜோக் அடிக்கின்றது - வடிவேல் சுரேஸ் தெரிவிப்பு.

Published:Category:

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

#MIvDC

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக்கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிப்பு.

Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 29 பேர் உயிரிழப்பு.

Published:Category:

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

#MIvDC

தடுப்பூசி பெறாதவர்கள் பாரிய அபாயத்திற்கு முகங்கொடுக்க நேரிடும். ; ஹேமந்த ஹேரத்

Published:Category:

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

#MIvDC

மற்றுமொரு புதிய சுகாதார வழிகாட்டி வெளியீடு.

Published:Category:

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

#MIvDC

நீண்ட கால உறவுகளை வலுப்படுத்துவதாக ஜப்பான் உறுதி.

  • Thedipaar