Published:Category:

இராணுவ சிப்பாய் வாகன விபத்தில் ஸ்தளத்தில் பலி.

#MIvDC

இராணுவ சிப்பாய் வாகன விபத்தில் ஸ்தளத்தில் பலி.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் தம்பலகாமம் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாவ,கந்தளாய் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட  இரானுவ சிப்பாயான அகில மல்சாந் வயது (22) எனவும் தெரியவருகிறது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இளைஞன்  வீதியை கடக்க முற்பட்ட போது வாகனம் மோதி விட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையின் போது தெரியவருகிறது.

மோதி விட்டு தப்பிச் சென்ற வாகன சாரதியை கைது செய்ய தேடுதல்  நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் நேற்று மாலை (2) ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

#MIvDC

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

Published:Category:

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

#MIvDC

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

Published:Category:

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

#MIvDC

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

Published:Category:

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

#MIvDC

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

Published:Category:

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

#MIvDC

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Published:Category:

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

#MIvDC

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

  • Thedipaar