Published:Category:

நிஜ செங்கேணி என்ன செய்கிறார்? பேருதவி அறிவித்த லாரன்ஸ்!

#MIvDC

நிஜ செங்கேணி என்ன செய்கிறார்? பேருதவி அறிவித்த லாரன்ஸ்!

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம், இதுவரை பேசப்படாத இருளர் சமூகம் பற்றி பொதுவெளியில் விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையில், நிஜ வாழ்க்கையில் ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணியை கண்டுபிடித்து வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார்கள்.
.
ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இந்த படம் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ராஜாக்கண்ணு லாக் அப் மரணம் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் மனித உரிமைகள் செயல்பாட்டில் ஆர்வம் உள்ள வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

ராஜாக்கண்ணு என்கிற ஒரு இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரை போலீசார் செய்யாத திருட்டுக்காக கைது செய்து போலீஸ் காவல் சித்திரவதையில் அடித்து கொல்லப்படுகிறார். ஆனால், அவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்றுவிட்டதாக காவல் துறையினர் ராஜாக்கண்ணுவின் மனைவி செங்கேணியிடம் கூறுகிறார்கள்.

ராஜாக்கண்ணுவின் மனைவி தனது கணவர் எங்கே என்று கேட்டு நீதி கேட்கிறார். இந்த பிரச்னையை உள்ளூர் கம்யூனிஸ் கட்சியினர் முன்னெடுத்து போராட்டம் நடத்துகிறார்கள். வழக்கறிஞர் சந்துரு சட்டப் போராட்டம் நடத்தி நீதி பெற்று தருகிறார். ராஜாக்கண்ணுவை போலீஸ் காவலில் அடித்துக் கொன்ற போலீஸ்காரர்களுக்கு தண்டனை பெற்றுத் தருகிறார். இந்த சம்பவம் 1994-ல் விருத்தாச்சலம் பகுதியில் உண்மையாக நடந்த சம்பவம் என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நடிகர் சூர்யா பழங்குடியினர் இருளர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார்.

ஜெய் பீம் படத்தின் மூலம் ராஜாக்கண்ணுவின் லாக் அப் மரணமும் இருளர் பழங்குடி மக்களின் பேசப்பட்ட அளவுக்கு, தனது கணவர் ராஜாக்கண்ணுவின் மரணத்துக்காக கடைசி வரை உறுதியாக இருந்து நீதி கேட்ட செங்கேணி பற்றி யாரும் பெரிய அளவில் பேசவில்லை. இந்த சூழலில்தான், பிரபல யூடியூப் சேனல் குழுவினர் உண்மையான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியைக் கண்டுபிடித்து அவர் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளனர்.

உண்மையில், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி இன்றைக்கு எப்படி இருக்கிறார் என்ற அவருடைய நிலையை வலைப் பேச்சு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மிகவும் பாழடைந்த ஒரு குடிசையில் வாடகைக்கு வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு சூர்யா வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரென்ஸ், ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதியின் நிலையை அறிந்து வருத்தம் அடைந்ததாகவும் அவருக்கு ஒரு வீடு கட்டித்தர உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

#MIvDC

எட்டோபிகோக் டவுன்ஹவுஸ் வளாகத்தில் தீ விபத்து!

Published:Category:

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

#MIvDC

பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

Published:Category:

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

#MIvDC

மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!

Published:Category:

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

#MIvDC

கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனா ஓயாவில் சடலம் மீட்பு.

Published:Category:

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

#MIvDC

இந்திய இழுவை படகுகளுக்கு எதிராக ஊர்காவற் துறை பிரதேச செயலகம் முன் போராட்டம்.

Published:Category:

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

#MIvDC

ஆளுமையான அதிபரை நியமிக்குமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.

Published:Category:

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

#MIvDC

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு.

Published:Category:

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

#MIvDC

கிளிநொச்சியை 13ஐ எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகனம்.

Published:Category:

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

#MIvDC

நீரேந்தும் பிரதேசங்களில் காட்டுப்பகுதிகளுக்கு தொடர் தீ வைப்பு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

Published:Category:

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

#MIvDC

இலங்கையின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் பிரதான பாலப் பகுதியில் இடம்பெற்ற சிரமதானம்.

  • Thedipaar