Published:Category:

அமெரிக்க எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

#MIvDC

அமெரிக்க எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது!

அமெரிக்காவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் உறவினர்களை சந்திக்க முடியாமல் ஆசிய, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தவித்தனர். அமெரிக்காவின் சுற்றுலாதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விமான சேவை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.

தற்போது அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் சற்றுகுறைந்துள்ள நிலையில் 20 மாதங்களுக்குப் பிறகு  பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைசேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை முடிவை காண்பிக்க வேண்டும். கரோனா தொற்று இல்லாதவர்கள் மட்டுமேஅமெரிக்கா செல்ல அனுமதிக் கப்படுவர்.

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வர்களுக்கு விமான பயணத்துக்கு ஒருநாள் முன்பாக கரோனா பரிசோதனை நடத்தப்படும். அமெரிக்க விமான சேவை நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு விமான சேவையை இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பயணிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு கனடா, மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சாலை மார்க்கமாக செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar