Published:Category:

என்னை விட்ருங்கோ..!! கனடாவில் ஈழத்தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன்!

#MIvDC

என்னை விட்ருங்கோ..!! கனடாவில் ஈழத்தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கனடா கூட்டத்தில் கனடா வாழ் ஈழத்தமிழர்களால் சுமந்திரன் முட்டை வீசி விரட்டியடிக்கப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து, கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்றில் ஈழத்தமிழர்களால் சுமந்திரன் விரட்டியடிக்கப்பட்டார். 

சுமந்திரனுக்கு எதிராக கோசங்களை எழுப்பியபடி "சுமந்திரன் தமிழினத் துரோகி" என்று கோசமிட்டு கனேடிய தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

வீடியோ இணைப்பை பின்வருமாறு காணலாம்:



இதன் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் மண்டபத்துக்கு வழியே பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதே வேளை மண்டபத்துக்கு உள்ளேயும் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்தனர்.

பொதுமக்களது எதிர்ப்பாளர்களது ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு மதிப்பளித்து இடம் அளித்த பொலிஸார் நிலைமையை மிகவும் மனிதநேயத்துடன் கையாண்டு கூட்டத்தை கலைந்து செல்ல வழிவகை செய்தனர்.

இடையே காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, கூட்டத்தின் இடைநடுவே சுமந்திரன் வெளியேறிச் சென்றார்.

சாணக்கியனுக்கான எச்சரிக்கை

கூட்டத்தில் ஆரம்பத்தில் பேசிய இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். இதன் மூலம் இரா.சாணக்கியனிற்கான செய்தி சொல்லப்பட்டதுடன் கிழக்கிற்கான கௌரவமும் வழங்கப்பட்டள்ளது. அவர் பேசும் வரையில் பொறுத்திருந்து, எவ்வித இடையூறும் செய்யப்படவில்லை என்பதை புரிந்துகொண்டு இனிமேல் சாணக்கியன் செயல்பட வேண்டும் என்ற எச்சரிக்கையை கனேடிய வாழ் ஈழத்தமிழர்கள் உணர்த்தியுள்ளனர். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதைப்போல, பிற்காலத்தில் தடம் மாறினால், என்ன மாதிரியான சம்பவங்கள் அரங்கேறும் என்பதை கனேடிய தமிழர்கள் உணர்த்திவிட்டனர்.


தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகளுடனான உறவு

CTC போன்ற சில புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மீது இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. அப்படியிருந்தும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோர் எக்காரணத்திற்காக தொடர்பில் உள்ளனர் என்பது புலப்படவில்லை. ஏற்கனவே ஈழத்தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடிய பல தமிழ் அமைப்புகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே, இது போன்ற நிகழ்வுகளால் பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்நோக்கலாம்.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar