Published:Category:

ஞானசார தேரர் தலைமையிலான குழு கடற்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம்.

#MIvDC

ஞானசார தேரர் தலைமையிலான குழு கடற்கரைபள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான
கலகொட அத்தே ஞானசார தேரர் சனிக்கிழமை (04) இரவு கல்முனை பகுதியில் அமைந்துள்ள இரு வேறு இடங்களிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டார்.

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் மக்கள் கருத்தறியும் செயலமர்வுகள் கிழக்கு மாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில் நேற்று மாலை இவர் தலைமையிலான குழுவினர் கல்முனை பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது கல்முனை தாருஸ்ஸபா நிறுவனத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த இக்குழுவினர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனை முஸ்லிம் முக்கியஸத்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதன் போது கல்முனை வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் உட்பட சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் இதன் போது கல்முனையின் சமகாலத்தேவைகள் பற்றிய மகஜரொன்றும் இவரிடம் கையளிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டர்.

எனினும் அங்கு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஞானசார தேரரை இடைமறித்து ஊடகவியலாளர்கள் விஜயத்தின் நோக்கம் தொடர்பில் வினவினர்.

இதன் போது ஊடகங்கள் மக்களிடம் உண்மையான விடயங்களை அறிக்கையிட வேண்டும் எனவும் தவறான தகவல்களை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இதே வேளை கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகை தர்காவுக்கும் சென்று அதனையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் தாருஸ்ஸபா நிறுவனத்தின் தலைவர் மெளலவி ஸபானிஸ்  உஸ்தாத் சபா முஹம்மத்,ஜனாதிபதி செயலணி உறுப்பினர் சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், மற்றும் கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், மற்றும் வபா பாரூக்,நசீர் ஹாஜியார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar