Published:Category:

குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது.

#MIvDC

குச்சவெளி இளைஞனின் மரணம் நீதிக்கு புறம்பானதா? இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப் பிரதேசத்தில் தண்ணீருடன் கூடிய சேற்றுப்பகுதியில் இருந்து கடந்த 06.01.2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட குச்சவெளி நகர்ப்பகுதியினை சேர்ந்த இளைஞரான ஜமீல் மிஸ்பரின் மரணம் தொடர்பிலும் குச்சவெளிப் பொலிசாருக்கு எதிராக பொதுசன ஊடகங்கள் வழியாக அவரது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயமானது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞன் 05.01.2022 அன்று குச்சவெளிப் பொலிசாரினால் பேருந்தினை இடைமறித்து கைது செய்ய முற்பட்ட போதும் அவர் தப்பித்து காட்டுப்பகுதியினை நோக்கி ஓடியதாகவும் அவரை பொலிசார் கலைத்து சென்றதாகவும் பின் மறுநாள் காலையில் அவரது உடலம் நீருடனான சேற்றுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் அவரது உறவினர்களால் பொலிசாரிற்கு எதிராக பரவாலான குற்றச்சாட்டுக்கள் ஊடகங்கள் வழியாக முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலை அதிகாரிகள் குறித்த முஸ்லீம் இளைஞனின் உறவினர்களை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளதுடன் அவர்களின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விடயம் குறித்து திருகோணமலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரான சட்டத்தரணி ஆர்.எல் வசந்தராஜா அவர்களை தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவின் திருகோணமலைப் பிராந்திய காரியாலயமானது விசேட அவதானம் செலுத்தியுள்ளதாகவும் 1996 ஆம் ஆண்டின் 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய தனது சொந்த பிரேரணை அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்படி விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.

Thedipaar Updates

Easy Entertaining Night 2023

  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக…
  • >நிகழ்வு சிறக்க அனைவரும் வருக வருக

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் அழைப்பிலும் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் விபத்து. ; ஒருவர் பலி

#MIvDC

மோட்டார் சைக்கிளும், கப் ரக வாகனமும் விபத்து. ; ஒருவர் பலி

Published:Category:

மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் கடும் தாக்குதல்

#MIvDC

மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் கடும் தாக்குதல்

Published:Category:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விபரம்!

#MIvDC

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் விபரம்!

Published:Category:

நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!

#MIvDC

நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!

Published:Category:

திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!

#MIvDC

திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!

Published:Category:

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

#MIvDC

அசிங்கமான கமெண்டிற்கு நடிகையின் பதில்!

Published:Category:

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

#MIvDC

பிரபு தேவாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?

Published:Category:

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

#MIvDC

விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Published:Category:

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

#MIvDC

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

Published:Category:

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி

#MIvDC

புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி

  • Thedipaar