அஜித் ரசிகர்கள்-ஜாக்குவார் தங்கம் போர் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவருக்கு சினிமாத்துறை சார்பில் வைக்கப்பட்ட பாராட்டு விழாவில், நடிகர் அஜித் பேசியதும், அதற்கு ரஜினி ஆதரவு கொடுத்ததும் இன்றும் பலருக்கும் நியாபகம் இருக்கும்.
ஆனால், அதே பேச்சை காரணம் காட்டி சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், அஜித்தை விமர்சித்ததும், அதற்கு எதிரொலியாக அஜித் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கம் வீட்டை உடைத்து சூறையாடியதும் நடந்தது.
அது நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ஜாக்குவார் தங்கத்தை இணையத்தை ஒரு கை பார்த்து வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.
சமீபத்தில் கூட, அஜித் ரசிகர்களால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக ஜாக்குவார் தங்கம் போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், அப்போது நடந்த என்ன என்பது குறித்து ஜாக்குவார் தங்கம் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் இதோ அந்த பேட்டி.
கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த போது, அஜித் தமிழை பற்றி ஒரு கருத்து பேசினார்.
அதனால் நான் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தேன்.
அதன் பின் அவரது ஆதரவாளர்கள் என் வீட்டை அடித்து உடைத்தனர்.
பின்னர் நடிகர் சங்கத்தில் வந்து நடந்த சம்பவத்திற்கு அஜித் வருத்தம் தெரிவித்தார்.
நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார்.
நடந்த சம்பவத்திற்கும் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்றார்.
சேதத்திற்கு நஷ்டஈடு தருகிறேன் என்றார். நான் தான் அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அந்த காலகட்டத்தில் அந்த கருத்து காரசாரமாக இருந்தது. எனக்கு என தாய் மொழி மீது பற்று உள்ளது.
ரஷ்யாவில் குட்மார்னிங் என்று சொன்னால், பளார் என்று அடித்து விடுவார்கள். காரணம், தாய் மொழி மீது அங்கு அவ்வளவு பற்று.
அவர்கள் மொழியில் தான் வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்கள்.
அஜித் உடன் ஒரு மாதம் மனகசப்பு இருந்தது. ஒரு மாதத்திற்கு பின் பேச ஆரம்பித்தோம். அப்போது சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தனர்.
அவர்கள் அழைத்து எங்களை சமரசம் செய்ய முயன்றனர். அப்போது அஜித் மனம் திறந்து பேசினார். எனக்கு சோறு போடுவது தமிழ் தான்.
நான் ஏன் தமிழை தவறாக பேசப்போகிறேன் என அஜித் கூறினார்.
அதுமட்டுமல்லால் சில பிரச்சனைகளுக்கு தன்னுடன் இருந்தவர்கள் தான் காரணம் என்றார்.
அவர்களும் மன்னிப்பு கேட்டனர் என அந்த பேட்டியில் ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.