Published:Category:

நாட்டின் நிதி நிலமை மிகமோசமான கட்டத்தினை அடைந்துள்ளது - எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு.

#MIvDC

நாட்டின் நிதி நிலமை மிகமோசமான கட்டத்தினை அடைந்துள்ளது - எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் தேவிபுரம் பகுதி மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.01.2022) மாலை நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிவைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்துகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எப்படியாக வாழவேண்டும் என்பதற்கான முத்தாய்ப்பாகத்தன் இருக்கின்றது  பல மாதங்களுக்கு முன்னதாகவே நாங்ககள் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படப்போவதாக அறிவிப்பினை செய்துள்ளோம் அப்போது அரசு அதனை மறுதலித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் விவசாய அமைச்சின் செயலாளர் இதனை சொன்னபோது அவரை பதவியில் இருந்து விலத்தினார்கள். இப்போது அரசாங்கமே அதனை சொல்ல ஆரம்பித்து வி;ட்டார்கள்..

விவசயஅமைச்சர் சொல்கின்றார் தன்னுடைய 32 ஆண்டு தன்னுடைய அரசியல் வாழ்க்கை பாழாய் போகின்றது என்று சொல்கின்றர்

நாட்டின் நிதி நிலமை மிக மோசமாக அடைந்துள்ளது சரியாக இதனைநிர்வகிக்காத காரணத்தினால் தலைக்குமேலே கடனை வாங்கி அந்த கடனை அடைப்பதற்கு மேலும் கடன் வாங்கி மாறி மாறி வந்த பல  அரசாங்கம் செய்த தவறு அதிலும் சிறப்பாக இன்று பதவியில் உள்ள அரசாங்கம் இக்கட்டான நிலை வருகின்றது என்றும் தெரிந்துகொண்டும் பொருளாதார விடையத்தினை சரியான முறையில் கையாள முடியாமைக்கான காரணத்தினால் இப்படியான ஒரு நிலைக்கு நாடு வந்துள்ளது.

இது இந்த மாத முடிவிற்குள் இன்னும் மோசமான நிலையினை அடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் எங்கள் மக்கள் நிலத்தினையும் கடலினையும் நம்பி வாழும் மக்கள் அதிகம் வெளிநடுகளில் இருந்து வாருவாய் வருகின்றதை எதிர்பார்த்து வாழ்கின்றவர்களும் பலர் இருக்கின்றார்கள் அதன் காரணமாகவோ என்னவோ நாட்டில் மற்றப்பிரதேசங்களை விட எங்களுக்க இந்த தாக்கம் என்பது சற்று தாமதித்து வரலாம் ஆனால் ஏற்கனவே ஏனைய மாகாணங்களில் மக்கள் பட்டிணியின் விளிம்பிற்கு வந்துவிட்டர்கள் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் மாவட்டங்களில் அது வருகின்றபொழுது வரப்போகும் பஞ்ச காலத்தில் எங்களிடம் இருக்கும் அனைத்தினையும் அனைவரிடத்திலும் பகிர்ந்து உண்கின்ற நிலை வந்துள்ளது அதனால்தான் பகிர்ந்து உண்போம் என்கின்ற தொனிப்பொருளை மக்களுக்கு கொண்டுசெல்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம் எப்படி நாங்கள் இந்த முறை பொங்கப்போகின்றோம் என்று அங்கலாய்த்துக்கொண்டிந்த வேளை நம்பிக்கை ஒளிக்கீற்றாக இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றது.

நம்பிக்கையினை தளரவிடாமல் தொடர்ந்து பயணிப்போம் சேர்ந்து பயணிப்போம் அனைத்து சவால்களையும் நாங்கள் சேர்ந்து முகம் கொடுத்து முறிகடிப்போம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

#MIvDC

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

Published:Category:

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

#MIvDC

ன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள் - வடக்கு கிழக்கு வலிந்து காணா

Published:Category:

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

#MIvDC

சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .

Published:Category:

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

#MIvDC

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது.

Published:Category:

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

#MIvDC

வத்திராயனிலிருந்து கடலுக்கு சென்ற 2 மீனவர்களை காணவில்லை.

Published:Category:

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

#MIvDC

யாழில் போராட்டக்காரர்களுடன்  போலீசார் தள்ளு முள்ளு.

Published:Category:

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

#MIvDC

இலங்கையில் தற்போது 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன்.

Published:Category:

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

#MIvDC

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

  • Thedipaar