Published:Category:

பொடி மெனிக்கே புகையிரதம் கொட்டகலையில் நிறுத்தப்பட்டது பயணிகள் ஆர்ப்பாட்டத்தில்.

#MIvDC

Listen to news

பொடி மெனிக்கே புகையிரதம் கொட்டகலையில் நிறுத்தப்பட்டது பயணிகள் ஆர்ப்பாட்டத்தில்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே புகையிரதம் புகையிரத சமிஞ்ஞை பிரச்சினை காரணமாக கொட்டகலை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனால் குறித்த ரயிலில் வந்த பயணிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதுடன், அட்டன் - நுவரெலியா பிரதான வீதியை கொட்டகலை நகரில் மறித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதன்படி கொட்டகலை ரயில் நிலையம் மூடப்பட்டதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடிமெனிகே ரயில் நேற்று மதியம் 12.45 அளவில் கொட்டகலையில் இடைநடுவே நிறுத்தப்பட்டது.

இதனால் அட்டன் மற்றும் திம்புளை பத்தனை பொலிஸார் இணைந்து அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவைக்கு பலத்த பாதுகாப்பு வழங்கி கொட்டகலை ரயில் நிலையம் வரை குறித்த ரயிலை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேற்படி நடவடிக்கையால் நீண்ட விடுமுறை காரணமாக வெளியிடங்களுக்கு செல்வோரும்,  தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் தமிழ் மக்கள் என ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதனால் கடும் சிரமங்களுக்கும், பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல் கொட்டகலை நகரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் நகர வீதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

#MIvDC

அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கை கோரிக்கை

Published:Category:

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

#MIvDC

கம்பளை கூட்டுறவு சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி

Published:Category:

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

#MIvDC

சஜித் தவம் புரியும் தலைவர் - நடிகை தமிதா கருத்து

Published:Category:

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

#MIvDC

மாணவியை தும்புத் தடியால் ஓட ஓட தாக்கிய அதிபர்.

Published:Category:

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

#MIvDC

12 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் உகாண்டா பிரஜை கைது.

Published:Category:

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

#MIvDC

கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது.

Published:Category:

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

#MIvDC

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஈரான் படைகள் தாக்குதல் 13 பேர் பலி.

Published:Category:

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

#MIvDC

கனடாவில் சினிமாப் பாணியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது.

Published:Category:

இரு விமானங்கள் மோதி விபத்து.

#MIvDC

இரு விமானங்கள் மோதி விபத்து.

Published:Category:

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

#MIvDC

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் T-20 போட்டியில் இந்தியா வெற்றி.

  • Thedipaar