Published:Category:

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் நியமனம்.

#MIvDC

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் நியமனம்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரினைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் CI [Chief Police Inspector] பதவியுயர்வு பெற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிந்தவூரினைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான A.றபீக் (CI) பொலிஸ் சேவையில் கடந்த 33 வருடங்களாக தன்னை பாதுகாப்புத் துறையில் அற்பணிப்புடன் சேவையாற்றிய நிருவாகத் துறையில் ஆளுமையுள்ள ஒருவராவார்.

இலங்கையின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இவர் நாட்டின் பல பாகங்களிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளதோடு நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றி பொலிஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

அந்த வகையில் தனது ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பிலும் பின்னர் மொனறாகலை, தனமல் வில,வீரக்கொடையிலும் குறிப்பாக பயங்கரவாதம் தலைதூக்கிய அச்சந்தர்ப்பத்தில் தாய்  நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்து நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு தங்கலையில் உப பொலிஸ் பரிசோதகராகவும் (SI) அதன் பின்னர் வெல்லவாயவில் பொலிஸ் பரிசோதகராக (IP) பதவி உயர்வு பெற்று அங்கு கடமையாற்றியதோடு பின்னர் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால்காஸிம் (MP) அவர்களது மெய்ப்பாதுகாவலராக எட்டு வருடங்கள் கடமையாற்றியதோடு இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை நீதிமன்றத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது சேவைக்காலத்தில் பொலிஸ் நிருவாகப் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நிருவாகப்பிரிவு (Administrative Unit)பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையிலேயே கடந்த 2020.05.08ம் திகதியன்று பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

முன்னாள் கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட  கே.எச் சுஜீத் பிரியந்த இடமாற்றம் பெற்று சென்றதை அடுத்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

#MIvDC

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.

Published:Category:

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

#MIvDC

முல்லைத்தீவில் கஜமுத்தினை விற்பனைக்கு கொண்டுவந்தவர் கைது.

Published:Category:

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

#MIvDC

இந்தியா தமிழர்களிடம் பேச வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

Published:Category:

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

#MIvDC

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி.

Published:Category:

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

#MIvDC

மெக்ஸிகோவில் மூன்று கனேடியர்கள் மீது துப்பாக்கி சூடு. ; ஒருவர் பலி.

Published:Category:

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

#MIvDC

ஜப்பானின்  சக்திவாய்ந்த நிலநடுக்கம். ;  10 க்கும் மேற்பட்டோர் காயம்.

Published:Category:

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

இலங்கையில் மேலும் 75 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

#MIvDC

கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது. ; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

Published:Category:

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

#MIvDC

அவசர சிகிச்சை பிரிவுகளில் நெருக்கடி நிலை ஏற்படும்.

Published:Category:

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

#MIvDC

பிளாஸ்டிக் பெரலுக்குள் விழுந்து 3 வயது சிறுமி பலி.

  • Thedipaar