பதவி இழக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பதவி இழக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்!
ஒரேயொரு விருந்தில் கலந்து கொண்டதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவியே பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியினரே வலியுறுத்தி வரும் நிலையில், அந்தப் பொறுப்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக்கிற்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டபோது, பிரிட்டன் மக்களுக்கு போரிஸ் ஜான்சன் துரோகம் செய்துவிட்டார். விருந்தில் கலந்த சம்பவத்தை பல மாதங்களாக மக்களுக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே, கொரோனா பாதிப்புகளை ஜான்சன் சரியாக கையாளவில்லை என்று புகார்கள் எழுந்திருந்தன. கொரோனா தொடங்கியது முதல் போரிஸ் ஜான்சன் மீது தொடர்ந்து சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. தன் மீதான குற்றச்சாட்டுக்கு விள்ககம் அளித்துள்ள போரிஸ் ஜான்சன், விருந்து நிகழ்ச்சியை தனது அலுவல் நிகழ்ச்சியாக கருதி பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஆனால் இவரது விளக்கம் துளியும் எடுபடவில்லை.
சொந்த கட்சியான கன்சர்வேடிவ்-ன் நிர்வாகிகள் போரிஸ் ஜான்சனின் செயலைக் கண்டித்துள்ளனர். விரைவில் அவரை நீக்கி விட்டு புதிய ஒருவரை பிரிட்டன் பிரதமராக நியமிக்கும் எண்ணத்தில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.