முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொள்ளை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பகல் கொள்ளை சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன.
22.01.2022 அன்று முள்ளியவளை மாமூலை பகுதியில் வீட்டில் யாரும் இல்லாத வேளை தளபதி என்பவரின் வீட்டில் ஓட்டினை பிரித்த கொள்ளையர்கள் வீட்டிற்குள் இறங்கி அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்தி தொண்ணூறாயிரம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள்.
நேற்றைய நாள் மகளை புலமைபரீசில் பரீட்சைக்காக பாடசாலைக்கு தயார் அழைத்து சென்ற வேளை குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் முள்ளியவளை பொலீஸ் பிரிவிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 19.01.2022 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் காலை வேளை ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் இறைவணக்கத்திற்க சென்றவேளை உந்துருளியில் வந்த கொள்ளையன் பாடசாலையின் முன்பகுதியில் உள்ள ஆசிரியர்களின் அறையில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியல் ஒருவரின் கை பையினை அபகரித்து சென்றுள்ளார்.
பெறுமதியான தொலைபேசிகள் பணங்கள் என்பன கைப்கையில் உள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து 21.01.2022 அன்று பாடசாலை முன்னால் ஆசிரியரின் வெறும் கைப்பையினை வீசிவிட்டு சென்றுள்ளார்கள்.
இதுதொடர்பிலும் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
அண்மை நாட்களில் வீடுகளில் உள்ள பொருட்கள், உந்துருளிகள்,உள்ளிட்ட பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.