மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
மீட்பு முயற்சியில் கனேடிய அதிகாரிகள்: குளிரில் உறைந்து பலியானவர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு!
அமெரிக்கா - கனடா எல்லையில், கடுங்குளிரில் சிக்கி உறைந்து பலியான இந்தியா்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் கனடாவிலிருந்து எல்லையைத் தாண்ட முயற்சித்த போது இந்த துயரச் சம்பவத்தில் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டீல் (39), வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் பட்டீல் (37), விஷாங்கி (11), தார்மிக் (3) என்பதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், கனடா - அமெரிக்க எல்லைக்கருகே உறைந்த நிலையில் பலியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்கா - கனடா எல்லையில் கடுங்குளிரில் சிக்கி இந்தியா்கள் உயிரிழந்த விவகாரம் தொடா்பான தகவல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் தொடா்ந்து சேகரித்து வந்த நிலையில், தற்போது அவர்களது அடையாளம் காணப்பட்டிருப்பதாக கனடா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கனடாவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது குழந்தை உட்பட 4 இந்தியா்கள் கனடா எல்லைப் பகுதியில் கடுங்குளிரில் சிக்கி உயிரிழந்தனா். அமெரிக்காவுக்குள் போதிய ஆவணங்களின்றி நுழைந்த நபா்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு நிகழ்ந்த தேடுதலின் போது இந்தியா்கள் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அவா்கள் குஜராத்தைச் சோ்ந்தவா்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடமிருந்து தொடா்ந்து தகவல்களை சேகரித்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மேனிடோபா நகருக்குச் சென்றுள்ளனா். அதேபோல், சிகாகோவிலிருந்து ஒரு தூதரகக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் தூதரக ரீதியிலான உதவிகள் தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழந்த இந்தியா்களின் உடல்கள் ஜனவரி 26 ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உடல்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இது குறித்து இந்திய தூதரகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.