Published:Category:

தென்னிலங்கையில்  போராடுபவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்

#MIvDC

தென்னிலங்கையில்  போராடுபவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.என வடகிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்தார்.

சமகால நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் எந்த அரசாங்கம் வந்தாலும் எதுவுமே மாறப்போவது கிடையாது.

வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது.

ஆனந்த சுதாகரன் மற்றும் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு நடந்த விடயங்களில் இருந்து இதனை உணர்ந்து கொள்ள முடியும்.

தற்போது தெற்கில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வடக்கு மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை தென்னிலங்கை மக்களும் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் கோட்டா கோ கம, மைனா கோ கம என போராட்டத்தில் ஈடுபவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவ வேண்டும்.

எமது உறவுகள் கையளிக்கப்பட்ட பின்னரே காணாமலாக்கப்பட்டவர்கள் என்பதை தென்னிலங்கை போராட்டக்காரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மறைமுகமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும்.

தமிழர்கள் கடந்த காலங்களில் ஏன் அடக்கப்பட்டார்கள், வன்முறை ஏன் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது போராடுபவர்கள் சிந்திக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மீண்டும் வன்முறை ஏற்படாத வகையில் ஒரு சுயநிர்ணய உரிமையை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar