கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.
கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் போலீசார் மற்றும் உயரதிகாரிகளின் கவணதிற்கு கொண்டு சென்ற சம்பவத்தையடுத்து நேற்றிரவு (19-05-2022) கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையத்தின் கதவுகள் பொருட்கள் என்பவற்றுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை மருதங்குளம் மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக விவசாய நிலங்களிலும் விவசாய வீதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்து மாறு நேற்றைய தினம் (19-05-2022) விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
இதனையடுத்து அவர்களது தொலைபேசிகளுக்கு அழைப்பெடுத்து அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்றிரவு குறித்த விவசாய அமைப்புக்களின் பிரதிநிதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய மயில் வாகனம் நந்தகுமார் என்பவரின் வர்தக நிலையத்துக்கு முகத்தை மூடிக் கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் அவரது வர்த்தக நிலையத்தின் கதவு தளபாடங்களை அடித்து சேதமாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் சீ.சீ ரீ கமராமூலம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.