திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!
திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறியதாவது:
இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும். தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.
கடனை மறுசீரமைக்கும் வரை இலங்கை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாது. இதனை கடன் வாங்கியவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். எனவே அதற்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
இது 1948 இல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் முதல் முறையாக கொடுத்த தவணை மாறி கடனை திருப்பிச் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு இது மிகவும் துன்பகரமான நேரமாகும். உலகிலேயே மிக மோசமான கடன் பத்திரங்கள் இலங்கையினுடையது என ரேட்டிங் நிறுவனங்கள் கூறுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். கடனளித்தவர்களிடம் கடன் மறுசீரமைப்பு செய்யுமாறு பேசி வருகிறோம். நெருக்கடியில் இருந்து வெளியேற இந்த ஆண்டு 3 பில்லியன் முதல் 4 பில்லியன் டாலர்கள் வரை தேவை.
அரசியல் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது எனது பணியை தொடர்வதற்கு ஆறுதல் அளிக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை திரும்பவில்லை என்றால் நான் பணி செய்வதில் எந்த அர்த்தமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.