ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை தொடர்பிலான இணைப்பு ஆவணங்கள் அனைத்தும் தமிழ் மொழி மூலம் நேற்றைய தினம் ( 27) அவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு அவை கையளிக்கப்பட்டன.
கடந்த தவணையின்போது ஸஹ்ரானின் மனைவி சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணி பிரதிவாதிக்கு எதிரான சான்றாக முன்வைக்கபப்டும் அவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்கள மொழியில் உள்ளதால்,அதன் தமிழ் மொழிபெயர்ப்பு அவசியம் என நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய குற்றப்பத்திரத்தின் இணைப்பு ஆவணங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் அவை தமிழ் மொழியில் மொழி பெயர்க்கபப்டல் வேண்டும் எனவும் அப் போதே பிரதிவாதிக்கு தன் பக்க நியாயங்களை முன்வைக்க முடியுமாக இருக்கும் எனவும் ஹாதியாவின் சட்டத்தரணி சுட்டிக்காட்டப்பட்து.
அதன்படி கடந்த தவணையில் நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைய பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தின் இணைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு குறித்த வழக்கு விசாரணையின்போது அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனால் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணியிடம் கையளிக்கப்பட்டது.
மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் யூலை மாதம் 21 திகதிக்கு குறித்த வழக்கு மறு தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.