வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் பஜார் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக தலை சிதறிய நிலையில் காயங்களுடன் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு அனுமதித்தனர்.
எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று (27.05.2022) இரவு 11.45 மணியளவில் வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன் பகுதியில் இரவு தலை சிதறிய நிலையில் வீதியின் நடைபாதையில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதனை அவதானித்த மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் முன்பதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற் பகுதியில் விடுதி அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்கொலை செய்துகொண்ட குறித்த நபர் இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இவர் விடுதியில் தங்கியிருந்து நகை வேலை செய்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ள நிலையில் இது கொலையா தற்கொலையா, அல்லது தவறி வீழ்ந்து இறந்துள்ளாரா என்ற கோணங்களில் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு