ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்தை ஏற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்
ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்தை ஏற்றிய அரசு மருத்துவமனை ஊழியர்
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் நோயாளிக்கு ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்தை கலந்து ஏற்றிய அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹோபா மாவட்டத்தின் பாந்த்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான ராம்குமாரி. கணவரை இழந்த இவர் தனது மகன் ஜுகல் கிஷோருடன் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு மே 23ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகனின் சிகிச்சைக்கு ரத்தம் செலுத்த வேண்டும் என மருத்துவர் கூறியுள்ள நிலையில், அங்கு பணியாற்றும் ராஜ்குமாரி என்ற பெண் சுகாதாரத்துறை ஊழியர் ரத்தம் ஏற்பாடு செய்ய ரூ.5,000 லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து தாயார் ராம்குமாரி தனது நகையை விற்று ரூ.5,000 ஏற்பாடு செய்து அந்த ஊழியரிடம் தந்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த ஊழியர், ரத்தத்திற்கு பதிலாக சிவப்பு நிற மருந்துடன் குல்கோஸை கலந்து ரத்தம் போல ஏற்றியுள்ளார்.
தவறான ரத்தம் மகன் ஜுகலுக்கு ஏற்றப்பட்ட உடனே அவரின் உடல்நிலை மேலும் மோசமடைய தொடங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த தாயார் ராம்குமாரி புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான ஊழியர் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.