Published:Category:

முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.

#MIvDC

முதலை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களியோடை ஆற்றின் ஓரத்தில் கடந்த திங்கட்கிழமை (30)  காலை தனது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்  55 வயதுடைய நிந்தவூர் 09 ஆம் பிரிவைச் சேர்ந்த அப்துல் மஜீட் ஹூசைன் என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் மறுநாளான செவ்வாய்க்கிழமை (31) காலை முதலை தாக்குதலுக்குள்ளான நிலையில் கடற் படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தது.

07 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் ஒரு இசைக் கலைஞனாவார். இவர் மிருதங்கம் வாசிப்பதில் சிறந்து விளங்கியதுடன் மக்களினால்  டோல் மாஸ்டர் என அழைக்கப்பட்டார்.

கடந்த வருடம் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினமன்று  காலை தனது வளர்ப்பு மாட்டுகளுக்கு புல் வெட்டிக் கொண்டிருந்த களியோடை ஆற்றின் வடக்குப் புறத்தில் இவரது துவிச்சக்கர வண்டியும்  சேர்ட்டும் பாதணியும் காணப்பட்டதுடன்  மேலும் வெட்டப்பட்ட புற்களும் தலையில் அணிந்திருந்த தொப்பியும்  புல்லை எடுத்துச் செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பையும் அந்த இடத்தில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து உறவினர்கள் மக்களினால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர்  ஒரு சிறு அளவு புல்லை வெட்டிய பின்னரே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாமென்று அங்கு கிடைக்கும் அடையாளங்களின் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

முதலையின் தாக்குதலில் மரணித்தவர் நாளாந்தம் தமது வளர்ப்பு மாட்டுக்கு புல் வெட்டும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். காலையில் சென்றவர் காலை 9.00 மணியளவில் வீடு திரும்புவது வழக்கமாகும்.

இந்தப் பின்ணணியில் புல் வெட்ட சென்றவர்  நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள்  ஆற்றிலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் உறவினர்கள் தேடியுள்ளனர்.

பின்னர்  கடற்படையினரும் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட  நிலையில்  தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள தென்னந் தோட்டத்தில் உள்ள நீரோடையில் உள்ள முதலையின் புதைகுழி ஒன்றுக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புல் வெட்டிய இடத்திலிருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் சடலம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar