Published:Category:

தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி

#MIvDC

தலவாக்கலையில் மரம் விழுந்து ஒருவர் பலி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை  வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்றை, குற்றிகளாக வெட்டிக் கொண்டிருந்த நபரொருவர், மரக்குற்றியொன்று அந்நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

 தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை மணிமாறன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம்  நேற்று (14) செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. ஹேலீஸ் பிளான்டேசன் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில்  ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டப்படுகின்றது.

 அதில் குறித்த தொழிலாளியும் மற்றொரு தொழிலாளியும் நேற்றைய தினம் ஸ்கல்பா தோட்டத்தில்  பள்ளத்தாக்கு பகுதியொன்றில் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த இரண்டு மரங்கள் ஒன்றோடு ஒன்றாக கீழே கிடந்தள்ளன. அதிலொரு மரத்தின் மேலே நின்று  அதனை   குற்றிகளாக வெட்டிக்கொண்டிருந்தபோது  அதிலொரு மரக்குற்றி, வழுக்கி கொண்டு வந்து குறித்த நபரின் நெஞ்சு பகுதியில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar