Published:Category:

கிழக்கு ஆளுனருக்கும் நியூசிலாந்து தூதுவருக்குமிடையே விசேட சந்திப்பு,

#MIvDC

கிழக்கு ஆளுனருக்கும் நியூசிலாந்து தூதுவருக்குமிடையே விசேட சந்திப்பு,

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்கள் இன்று (16) காலை இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் அப்பிள்டனிடம் கிழக்கு மாகாணத்தில் முதல் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார். இதனூடாக மாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கு உதவுமாறும் ஆளுநர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

 தூதுவருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இந்த விசேட சந்திப்பு இன்று (16) காலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரும் தூதுவரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட தற்காலிக "நிலையான பால் பண்ணை திட்டத்தை" நியூசிலாந்து தூதுவர் பாராட்டினார். அதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தூதுவர் இச் சந்திப்பின் போது மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நியூசிலாந்து தூதரகம் ஸ்தாபிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு வருடத்தை கடந்துள்ளதுடன், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது நியூசிலாந்து தூதுவர் மைக்கேல் அப்பிள்டன் ஆவார்.

 இரு நாடுகளுக்குமிடையிலான பல விடயங்கள் தொடர்பில் ஆளுநரும் தூதுவரும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
 கிழக்கு முதலீட்டில் பங்களிப்புச் செய்ய  நியூசிலாந்து தூதுவரை ஆளுனர் இதன் போது அழைப்பு விடுத்தார்

 தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இயற்கை விவசாயம் ஏன் தோல்வியடைகிறது என்று நியூசிலாந்து தூதுவர் கேட்டார். அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த வேலைத்திட்டம் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 இந் நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி. வணிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar