கனடாவில் முடிவுக்கு வந்தது 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்னை!
கனடாவில் முடிவுக்கு வந்தது 49 ஆண்டு கால ஹான்ஸ் தீவு பிரச்னை!
நட்பு நாடுகளான கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையே 49 ஆண்டுகளாக நீடித்து வந்த ஹான்ஸ் தீவு பிரச்னை, இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக முடிவுக்கு வந்தது.
கனடா, டென்மாா்க் இடையே எல்லைகளை வரையறுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1973-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வெறும் 1.3 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட குட்டித் தீவான ஹான்ஸ் யாருக்குச் சொந்தம் என்பதில் முடிவெடுக்கப்படவில்லை.
வெறும் பாறையால் அமைந்த அந்தத் தீவில் கனிம வளங்கள் எதுவும் இல்லை. மேலும், அங்கு யாரும் வசிக்கவும் இல்லை. இருந்தாலும் அந்தத் தீவுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வந்தன.
கடந்த 1984-ஆம் ஆண்டில் டென்மாா்க் அமைச்சரவொருவா் தங்கள் நாட்டுக் கொடியையும் மதுப் புட்டி ஒன்றையும் வைத்து டென்மாா்க் தீவுக்கு நல்வரவு என்று எழுதிவைத்துச் சென்றாா்.
அதற்குப் பதிலடியாக, கனடா நாட்டுக் கொடியையும் கனடா மதுப் புட்டியையும் அந்த நாட்டவா்கள் வைத்தனா். அதன் தொடா்ச்சியாக, இரு நாட்டு கொடிகளும் மதுப் புட்டிகளும் ஹான்ஸ் தீவில் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கப்பட்டு வந்தன.
இதன் காரணமாக, கனடாவுக்கும் டென்மாா்க்குக்கும் இடையிலான இந்த எல்லைப் பிரச்னை விஸ்கி போா் என்று பரவலாக அழைக்கப்பட்டது.
இந்தச் சூழலில், ஹான்ஸ் தீவை தங்களிடையே பிரித்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கையொப்பமாகியுள்ளது. இதன் மூலம், 49 ஆண்டுகலளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.