நோபல் பரிசை ஏலத்தில் விற்ற பத்திரிக்கையாளர்
நோபல் பரிசை ஏலத்தில் விற்ற பத்திரிக்கையாளர்
ரஷ்ய நாட்டில் டிமித்ரி முரடோவ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நோவாயாகாஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருக்கிறார். அது மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கடந்த 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. அந்த நோபல் பரிசில் அவருக்கு கிடைத்த 3.80 கோடி ரூபாய் பணத்தை முதுகெலும்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு கொடுத்து உதவினார்.
இந்நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நிலவி வருவதால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரினால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். இதன் காரணமாக தனக்கு கிடைத்த தங்கப் பதக்கத்தை டிமித்ரி முரடோவ் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள ஹெரிடேஜ் என்ற நிறுவனத்தின் மூலமாக ஏலத்திற்கு விட்டுள்ளார். அந்த ஏலத்தில் தங்க பதக்கத்திற்கு இந்திய மதிப்பின்படி 808 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இந்தப் பணத்தை உக்ரைனில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு கொடுக்கப் போவதாக டிமித்ரி முரடோவ் அறிவித்துள்ளார். இந்த பணத்தை ஐநா சபையில் உள்ள மனிதாபிமான நிறுவனமான ஐநா சிறுவர் நிதியத்தில் முரடோவ் வழங்கியுள்ளார். மேலும் அகதி குழந்தைகளுக்கு உதவுவதற்காக தன்னுடைய நோபல் பரிசை ஏலத்தில் விற்ற டிமித்ரி முரடோவை பலர் பாராட்டி வருகின்றனர்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.