ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் இலங்கை 2-1 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
அவர் 110 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த தனஞ்செய டி சில்வா அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார். ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் அசலங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.