Published:Category:

கொத்மலையில் பஸ் விபத்து - ஒருவர் பலி - 12 பேர் காயம்.

#MIvDC

Listen to news

கொத்மலையில் பஸ் விபத்து - ஒருவர் பலி - 12 பேர் காயம்.

பூண்டுலோயாவில் இருந்து கம்பளை நகரை நோக்கி பயணித்த தனியார்  பஸ் ஒன்று பூண்டுலோயா - கொத்மலை பிரதான வீதியில்  மல்லாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ்நேற்று மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 14 பேரில் ஒருவர் உயிரிழந்ததுடன், 12 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதன் காரணமாக பஸ் சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த 12 பேரும், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் அதில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்தில் உயிரிழந்தவர் புஸ்ஸலாவ நவகடதொர பகுதியை சேர்ந்த  56 வயதுடைய  தம்மிக்க ஹேமந்த யாப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள் அடங்குகின்றனர் என  வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar