Published:Category:

பிரதேச செயலகத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்ட எரிபொருட்கள் மீள கையளிப்பு.

#MIvDC

பிரதேச செயலகத்தில் பொலிஸாரால் மீட்கப்பட்ட எரிபொருட்கள் மீள கையளிப்பு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இருந்து பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருட்கள் மீளவும் பிரதேச செயலகத்திடம் நேற்றைய முன் தினம் (03) கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30ந் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினை சோதனையிட வேண்டும் என பொலிஸார் அனுமதி கோரியிருந்தமையை பிரதேச செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் மக்களுக்கு தெளிவுபடுத்தவும் மற்றும் வெளிப்படைத் தன்மையினை பேணுவதற்காகவும் பிரதேச செயலகத்தினை சோதனையிடுவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கி இருந்தார்.

பிரதேச செயலகத்தினை சோதனையிட்ட பொலிஸார் அத்தியவசிய தேவைக்கு இருந்த எரிபொருளினை எடுத்துச் சென்றனர்.

இதில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு பயன்படுத்துவதற்காக அலுவலகத்தில் இருந்த 4.5 லீட்டர் மண்ணெண்ணை மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அலுவலக மின்பிறப்பாக்கி மற்றும் அலுவலக வாகன பாவனைக்கான 50 லீட்டர் டீசல் பொலிஸாரினால் எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் பிரதேச செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் சோதனை நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டனர்.

இதன்போது விடுதியில் பிரதேச செயலாளரின் அன்றாட சமையல் மற்றும் மின்சார துண்டிப்பு நேரங்களில் விளக்குக்காக பயன்படுத்துவதற்காக இருந்த 5 லீட்டர் மண்ணெண்ணை மற்றும் பிரதேச செயலாளரின் குடும்பம் யாழ்ப்பாணத்தில் என்பதால் வீட்டில் ஏதும் அவசர தேவையிருப்பின் சென்றுவருவதற்காக சாதாரண மக்கள் பெற்றுக் கொள்வது போல் தனது மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்துவதற்கான 10 லீட்டர் பெற்றோலினை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்ட குறித்த எரிபொருளினை நேற்றைய முன் தினம் 03.08.22 மீண்டும் பிரதேச செயலகத்திடம் பொலிஸார் கையளித்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar