Published:Category:

அரசியல்வாதிகள் எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை.

#MIvDC

அரசியல்வாதிகள் எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்கவில்லை.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல்வாதிகள் கூட எமது போராட்டம் தொடர்பில் பேசி வலுச்சேர்க்க வில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போது, மாவட்ட சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எங்களுடைய போராட்டம் 13 வருடங்களைய் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதில் நீதி கிடைக்கவில்லை என்பதால் இன்று, தனித்துவமாக போராட்டத்தை 8 மாவட்டங்களிலும் முன்னெடுக்க தொடங்கி 5 ஆண்டுகளை கடந்துள்ளது.

6வது வருடத்திலும் போராடிக்கொண்டிருக்கும் எமக்க இலங்கை அரசாங்கமும் எந்தவொரு நீதியையும் தரவில்லை. இந்த நிலையில் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றும் அங்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடிக்கொண்டே இருப்போம். அதேவேளை எமது போராட்டம் தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை 2000ம் நாட்களை அடைகின்றது. அன்றைய தினம் மாபெரும் போராட்டமாக முன்னெடுக்க அனைத்து தரப்பினரையும் அழைத்து போராட இருக்கின்றோம்.

அரசியல்வாதிகள், அரச அரச சார்பற்ற நிறுவனங்கள், தமிழ் மக்ககள் என அனை்தது தரப்பினரும் எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் ஒன்றிணைத்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரப்பிக்கப்படும் பேரணி டிப்போ சந்தியில் நிறைவடையும். இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜரும் கையளிக்கப்படவுள்ளது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. எமது உறவுகள் கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களை அழைக்கின்றோம்.

எமது இந்த போராட்டம் பல்லாண்டு காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் எமது போராட்டம் தொடர்பில் பேசப்படவில்லை. அரசியல்வாதிகள்கூட மௌனமாக இருந்தனர் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

#MIvDC

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

Published:Category:

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

#MIvDC

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

Published:Category:

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

#MIvDC

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

Published:Category:

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

#MIvDC

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

Published:Category:

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

#MIvDC

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

Published:Category:

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

#MIvDC

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

Published:Category:

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

#MIvDC

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

Published:Category:

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

#MIvDC

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

  • Thedipaar