Published:Category:

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண்!

#MIvDC

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு தமிழக வம்சாவளி பெண்!

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த மாகாண முதல்வராக ஜான் ஹோர்கன் (62) பதவி வகிக்கிறார். புற்றுநோய் பாதிப்பு காரணமாக கட்சியின் தலைமை பதவி, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத் துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழக வம்சாவளியை சேர்ந்த அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நவம்பர் 13-ம் தேதி வாக்கு பதிவு நடைமுறை தொடங்கி டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ம் தேதி உட்கட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்படுபவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். வரும் 2024-ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக களமிறங்குவார்.

அஞ்சலி அப்பாதுரை தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் கனடாவில் குடியேறினர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிட்லாம் நகரில் அவரது குடும்பம் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்படும் காலேஜ் ஆப் அட்லான்டிக் கல்லூரியில் சர்வதேச அரசியல், பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அவர், ஐ.நா. சபை உட்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar