Published:Category:

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தப்பி செல்ல முயன்ற 85 பேர் கைது!

#MIvDC

இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தப்பி செல்ல முயன்ற 85 பேர் கைது!

இலங்கை கடற்படையினரால் செப்-11 அதிகாலை மட்டக்களப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற 85 பேரை கைது செய்தனர். 

இதில் 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். 

அதேவேளை, மொஹத்திவரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 85 நபர்களை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி, கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​படகு மூலம் இடம்பெயர முயன்ற மேலும் 64 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar