Published:Category:

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல். ஒருவர் படுகாயம்

#MIvDC

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இளைஞர் குழு தாக்குதல். ஒருவர் படுகாயம்

வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தமிழ் இளைஞர் மீது இஸ்லாமிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தியமையால் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (22.09) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நெளுக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் பட்டாணிச்சூர் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.

இதன்போது அங்கு கூடிநின்ற குழு ஒன்று அந்த இளைஞர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியை பறிமுதல் செய்து, மிரட்டி கடிதம் ஒன்றையும் பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை பதிவு செய்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் தமிழ் இளைஞர்களும் ஒன்று கூடியமையால் இரு தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததனர்.

குறித்த சம்பவம் காதல் விவகாரம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளை இவ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி அறிக்கையிட சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரும் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது கடமைக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar