இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது.
இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது.
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (28) புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (27) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்திய செல்ல முயன்றுள்ளனர்.
இதன் போது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
திருகோணமலையை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரையும் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் இன்று புதன்கிழமை (28) காலை தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நேற்று புதன்கிழமை (28) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை (06-10-2022) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
ஏனைய 18 வயதுக்கு குறைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!