Published:Category:

சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணிகல் அடிப்படை உரிமை மனு தாக்கல்.

#MIvDC

சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணிகல் அடிப்படை உரிமை மனு தாக்கல்.

கொழும்பின் சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு கோரி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு  தாக்கல் செய்துள்ளனர்.

சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவை வெளியிட ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேலும், ஜனாதிபதி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறி, இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதால் அதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் வர்த்தமானி அறிவித்தல் செல்லுப்படியற்றது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த மனுவை விசாரித்து தீர்ப்பை வழங்கும் அவரை வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இடைக்கால தடையை விதிக்குமாறும் மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

#MIvDC

30 வயதோடு பிறந்த இரட்டை குழந்தைகள்

Published:Category:

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

#MIvDC

2 அங்குல வாலுடன் பிறந்த குழந்தை

Published:Category:

84 வயதில் exam எழுதும் முதியவர்

#MIvDC

84 வயதில் exam எழுதும் முதியவர்

Published:Category:

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

#MIvDC

கொசு கடித்து 4 வாரங்கள் கோமா

Published:Category:

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

#MIvDC

உங்க பிள்ளை டிவி அதிகம் பார்க்கிறார்களா?

Published:Category:

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

#MIvDC

நிர்வாணமாக கடற்கரையில் கூடிய மக்கள்

Published:Category:

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

#MIvDC

மொன்றியலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 3 மில்லியன் டொலர் நட்டஈடு!

Published:Category:

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

#MIvDC

பிராம்டன் நகரில் வாணவேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறதா?

Published:Category:

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

#MIvDC

ரொறன்ரோவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு!

Published:Category:

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

#MIvDC

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்.

  • Thedipaar