Published:Category:

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே..

#MIvDC

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே..

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே.. போர்க்குற்றம் செய்ததற்காக  ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்படும்என்று கனடாவின் எதிர்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.  கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரும்பழமைவாதக்கட்சியின் தலைவருமான மதிப்புக்குரிய PierrePoilievre கடந்த  ஞாயிற்றுக் கிழமை (30/10/2022) கனடாவின்  ரொறன்ரோ 

பெருநகர்ப் பகுதியின்  முக்கிய நகரான மிசிசாகா நகருக்கு வருகை தந்திருந்தார்ரொறன்ரோ பெருநகர்ப் பகுதியில் வாழும் கொன்சவேடிவ் கட்சியின் தமிழ் ஆதரவாளர்களை 

பிரத்தியேகமாகச் சந்தித்துக் கலந்துரையாடுவது அவரது  வருகைக்கான நோக்கங்களில் ஒன்றாக  திட்டமிடப்பட்டிருந்தது.  அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கொன்சவேடிவ்கட்சி ஆட்சியில் PierrePoilievre  முன்வைக்கவிருக்கும் பல்வேறு நிலைப்பாடுகளை 

தெளிவாக்கும் வகையலும் கலந்துரையாடல்கள் அமைந்தன.

சந்திப்பின்போது தமிழ்க் கனடியர்கள் ஒரு சமூகமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் தமிழ் செயல்பாட்டாளர்களுடன் ஆராயப்பட்டதுஒருகட்டத்தில்தற்போதைய லிபரல் அரசாங்கம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்மற்றும் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை என்பன குறித்துக்  காட்டிவரும் மேம்போக்கான நிலைப்பாடு  சுட்டிக்காட்டப்பட்டதுஅவற்றைச் செவிமடுத்த  Pierre Poilievre எதிர்வரும் காலங்களில் அது குறித்து  கொன்சவேடிவ்   கட்சி செய்யவிருக்கும் எதிர்வினைகளை விளக்கினார்.
அதன்பின்னர் கொன்சவேடிவ் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டூழியர்களின் முன்னிலையில்  Pierre Poilievre உரையாற்றினார்.

 உரையின்போது கனடாவின் பொருளாதாரத்தை சீர்செய்ய எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளில் சிலவற்றை பியர் விபரித்தார்

கூடவே ஸ்ரீலங்கா அரசின்  நடவடிக்கைகள் குறித்தும்  தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

 இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை அழுத்தமாகத் தெரிவித்த  Pierre Poilievre போர்க்குற்றம் செய்ததற்காக  ஸ்ரீலங்கா அரசு தண்டிக்கப்படும் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்

 மேலும்தனது ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் Stephen Harper,  முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் John Baird ஆகியோர் இலங்கை சார்ந்த விடயங்களில் முன்னெடுத்த செயல்பாடுகளையொத்த அரசியல் நடவடிக்கைகளையே தானும் முன்னெடுக்கப்போவதை உறுதி செய்தார்.

 இச்சந்திப்பின்போது அல்பேட்டா மாகாணத்தின் Calgary Forest Lawn தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும்,  நிதி மற்றும் நடுத்தர வர்க்க செழிப்புக்கான நிழல் அமைச்சருமான திரு. Jasraj Hallan,  ஒன்ராறியோவின் Flamborough Glanbrook தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Mr. DanMuys, ஒன்ராறியோ தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும்,

 கொன்சவேடிவ் கட்சியின் துணைத் தலைவருமான Ms MelissaLantsman ஆகியோரும் உடனிருந்து அங்கு கூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றினர்மேலும் கொன்சவேடிவ் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் காலகட்டத்தில் இரவு பகல் பாராமல் அயராது உழைத்ததன் மூலம் 68.15% வாக்குகளை தனக்குப் பெற்றுக் கொடுத்து வெல்ல வைத்த தமிழ் தொண்டூழியர்களில் சிலரை   Pierre Poilievre நேரில் சந்தித்து நன்றியும் தெரிவித்தார்

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

#MIvDC

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

Published:Category:

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

#MIvDC

சாமியாராக மாறிய நடிகை தமன்னா

Published:Category:

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

#MIvDC

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

Published:Category:

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

#MIvDC

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

Published:Category:

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

#MIvDC

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

Published:Category:

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

#MIvDC

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

Published:Category:

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

#MIvDC

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

Published:Category:

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

#MIvDC

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

Published:Category:

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

#MIvDC

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

Published:Category:

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

#MIvDC

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

  • Thedipaar