பிரதி தலைவராக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமனம்.
பிரதி தலைவராக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமனம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள மாமானிய டி.எஸ்.சேனநாயக்க அரசியல் கல்வி நிலையத்தின் பிரதி தலைவராக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் நேற்று திங்கட்கிழமை (21) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் இளைஞர்களுக்கு அரசியல் கல்வியினை வழங்கும் நோக்குடன் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் மாமானிய டி.எஸ்.சேனநாயக்க அரசியல் கல்வி நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் புதிதாக நிறுவப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தில் செயல்படும் என்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நாடு பூராகவும் விஸ்தரிக்கப்படும் என சயித் பிரேமதாச அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
கலாநிதி ஜனகன் அவர்களின் இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக கல்வி துறை ரீதியான பங்களிப்பும் அனுபவமும் இந்த கல்வி நிறுவனத்தை நிர்வகிக்க மிக உறுதுணையாக இருக்கும் என் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான புத்திக பத்திரன, கலந்து கொண்டார்.
இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் நேரடி வகுப்புகளுக்கு மேலதிகமாக online மூலமும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் செயற்பாடுகள் கலாநிதி ஜனகன் அவர்களின் வழிநடத்தலில் புலம்பெயர் தேசங்களில் வாழும் இலங்கையர்களும் பயன் அடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என குறிப்பிட்டார்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!