நீதியமைச்சர் விஜேயதாசாவை சந்தித்த கனடா தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி!
நீதியமைச்சர் விஜேயதாசாவை சந்தித்த கனடா தமிழ் காங்கிரஸ் பிரதிநிதி!
இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து கனடாவில் வாழும் கனேடிய தமிழ் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் கந்தையா நீதி அமைச்சா் கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷவை நீதி அமைச்சில் சந்தித்தார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள், செயற்பாடுகள், பற்றிய ஆவணத்தை அமைச்சரிடம் கையளித்தார்.
பஞ்சலிங்கம் கந்தையா அங்கு ஊடக வியலாளா் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் தடைப்பட்டியலிலிருந்து கனேடியத் தமிழ் காங்கிரஸ் கட்சியை நீக்கியமைக்கும், சில அரசியல்கைதிகளை விடுதலை செய்தமைக்கும் நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1983இல், நாட்டில் நடைபெற்ற கலவரங்களால் அநேகமான தமிழ் மக்கள் உலக நாடுகள் முழுவதிலும் இடம் பெயா்ந்து வாழத் தொடங்கினர். அதில் நானும் யாழ்.காரைநகரிலிருந்து இடம்பெயா்ந்து கனடாவில் டொரோன்டோவில் வாழ்கிறேன்.
தற்பொழுது நாங்கள் எமது தாய் நாட்டை வந்தடைந்துள்ளோம். சில செயற்பாடுகளை தமிழ் மக்களுக்கு செய்யும் படியும் அரசை வழியுறுத்தி வருவதாகவும் கந்தையா தெரிவித்தார்.
அமைச்சர் உறுதி
அனைத்து இலங்கையர்களும் சமமாக நடத்தப்படுவார்கள் என்றும் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து புலம்பெயர் மக்களுக்கும் இடமளிக்கும் அதே வேளையில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளை விருப்பமான பகுதியில் தொடங்குவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஒரு தளம் கிடைக்கும் என அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும் கனேடிய தமிழ் காங்கிரஸின் (CTC) தலைவர் சிவல் இளங்கோ மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா ஆகியோரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறு நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!