Published:Category:

சமுர்த்தி உத்தியோகத்தரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

#MIvDC

சமுர்த்தி உத்தியோகத்தரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வவுனியா இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர்க்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று  (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னாவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்த பகுதியில் கடமையேற்று 3 வருடங்களாகிய நிலையில் தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தே குறித்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள்,

குறித்த உத்தியோகத்தர் கிராம மக்களுக்கு உதவிகள் செய்ய கூடியவர் என்பதோடு கொரோனா காலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வீடுகளுக்கே சமுர்த்தி கொடுப்பனவுகளையும் வழங்கியிருந்தார். மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து அவர்களின் நிலை அறிந்து செயற்படுபவர்கள். இவ்வாறான ஒருவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

இதன்போது வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவருமான விக்டர்ராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் பொதுமக்களால் வழங்கப்பட்ட மகஜரையும் பெற்றதுடன் அதனை அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

#MIvDC

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

Published:Category:

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

#MIvDC

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

Published:Category:

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

#MIvDC

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

Published:Category:

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

#MIvDC

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

Published:Category:

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

#MIvDC

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

Published:Category:

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

#MIvDC

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

Published:Category:

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

#MIvDC

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

Published:Category:

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

#MIvDC

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

Published:Category:

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.

#MIvDC

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.

Published:Category:

வவுனியாவில் சுவிஸ் குடும்பஸ்தரின் விபரீத முடிவு

#MIvDC

வவுனியாவில் சுவிஸ் குடும்பஸ்தரின் விபரீத முடிவு

  • Thedipaar