முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு வருகைதந்து தகவல் கோரிய படையினர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு வருகைதந்து தகவல் கோரிய படையினர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்று காலை (24) வருகைதந்த முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள 591 ஆவது பிரிகேட் முகாம் படையினர் ஊடக அமையத்தின் தகவல்கள் தருமாறு கோரியுள்ளனர்.
சீருடை தரித்த இரண்டு இராணுவத்தினர் தம்மை 591 ஆவது படைமுகாமிலிருந்து வருகின்றதாக அடையாளப்படுத்தியதோடு தமக்கு ஊடக அமையம் தொடர்பில் சில தகவல்களை வழங்குமாறு கோரியுள்ளனர்.
ஊடக அமையத்தின் தலைவரோ அல்லது முகாமையாளரோ இருப்பார்கள் எனில் அவர்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்களை வழங்குமாறும் அவ்வாறான தகவல்களை பெற்றுவருமாறு தமது 591 பிரிகேட் படைமுகாமின் கட்டளை அதிகாரி பணித்துள்ளதாகவும் இதே போன்றே முல்ல்லைத்தீவு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களின் தகவல்களும் தம்மால் திரட்டப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையிலேயே ஊடக அமையத்தின் தகவல்களையும் கோருவதாக வருகைதந்த படையினர் ஊடக அமையத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை குமணனிடம் தெரிவித்தனர்.
இவ்வாறு படையினர் வருகைதந்த நேரம் ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளில் ஊடகவியலார்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்புகளோ அல்லது நிகழ்வுகளோ இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ஊடக அமையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் இராணுவ புலனாய்வாளர்கள் தொடர்சியாக கண்காணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று படையினர் வருகைதந்து தகவல்கள் கோரிய செயற்பாடு ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சதச்சத்தை ஊட்டியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் அன்று முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடி இருப்பதோடு மாவீரர் நாள் நினைவேந்தல் செயற்பாடுகளை வர்த்தகர்கள் தொடர்சியாக மேற்கொண்டு வருவது வழமை இவ்வாறு தமது கடைகளை மூடியுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் படையினர் கடைகளை திறக்குமாறு அச்சுறுத்தும் சம்பவங்கள் கடந்த வருடங்களில் பதிவாகியிருந்த நிலையில் இவ்வருடமும் மாவீரர் நாள் நெருங்கி வரும் நிலையில் முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் தகவல்களை படையினர் திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு