மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு.
மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு அம்பாறை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ப.சாந்தன், காரைதீவுப் பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், வெல்லாவெளி பிரதேச சபை உறுப்பினர் தியாகராஜா, உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர்களை நினைவு கூரும் முகமாக மாவீரர்களின் பெற்றோர், ஜனநாயகப் போரளிகள் கட்சியின் உபதலைவர், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்டோரால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நினைவுரை, சிறப்புரைகள் இடம்பெற்று பின் மட்டக்களப்பு மாவட்ட மாவீரர்களின் பெற்றொர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கு உதவிகள் மற்றும் தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
மாவீரர் நினைவு வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பல செயற்திட்டங்கள், துயிலுமில்ல துப்பரவுப் பணிகள், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மாவீரர் குடும்பங்களைக் கௌரவிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு ஒழங்கு படுத்தப்பட்டு நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது

கடலட்டைகள் மற்றும் சுறா இறகுகளுடன் இருவர் கடற்படையினரால் புத்தளத்தில் கைது
சாமியாராக மாறிய நடிகை தமன்னா

சாமியாராக மாறிய நடிகை தமன்னா
மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்

மீன்பிடி பைபர் படகில் கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்மப்பொருள்
யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து

யாழ் சிறுப்பிட்டி பகுதியில் விபத்து
துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ

துருக்கி சம்பவத்திற்கு உதவ முன்வந்த ரொனால்டோ
முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி

முச்சக்கரவண்டி விபத்தில் 9 மாத குழந்தை பலி
என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?

என்னதான் உங்களுக்கு ஆச்சு? போகிற இடமெல்லாம் வம்பா?
அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா

அட்வைஸ் மழையை பொழிந்த நயன்தாரா
100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!

100 வகையான சாப்பாடு போட்ட பாலிவுட் தம்பதி!
டிடி போட்ட அட்டகாசமான பதிவு!

டிடி போட்ட அட்டகாசமான பதிவு!