புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி
புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. விழா மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்ட செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன.
திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓத தேவாரம் பாட செங்கோலுக்கு பூஜை செய்யப்பட்டது.
மேலும் அனைத்து ஆதீனங்களும் செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
அப்போது புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார்.
புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் உடன் இருந்தார்.
இதையடுத்து புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு அளித்து பிரதமர் மோடி கவுரவித்தார். இதன் தொடர்ச்சியாக சர்வமத பிரார்த்தினை நடைபெற்றது.
புதிய நாடாளுமன்றத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது அவையில் இருந்தவர்கள் மோடி மோடி என உற்சாக குரல் எழுப்பினர்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக திகழும் என பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில் சக்தி வாயில் கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள் எம்பிக்கள் பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும் மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் ஆயிரத்து 280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்