பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் முதல் நாளில் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் தொடக்க ஆட்டத்தில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து) முதல்தடையை கடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. அவர் தன்னை எதிர்த்த பெல்ஜியத்தின் டேவிட் கோபினை சாய்த்தார்.இதே போல் சிட்சிபாஸ் (கிரீஸ்), ஜிரி வெஸ்லியை (செக்குடியரசு) தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) மார்டா கோஸ்ட்யுக்கை (உக்ரைன்) எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். .
சபலென்கா அடுத்து சக நாட்டவரான தகுதி நிலை வீராங்கனை ஷியாமனோவிச்சை சந்திக்கிறார். மற்ற ஆட்டங்களில் நடியா போடோராஸ்கா (அர்ஜென்டினா) ஜெசிகா போன்செட்டையும் (பிரான்ஸ்), மேக்டலினா பிரெச் (போலந்து) சூவாய் ஜாங்கையும் (சீனா), பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் விக்டோரியா ஹிரன்காகோவாவையும் (சுலோவக்கியா) ஊதித்தள்ளினர். அதே சமயம் 8-ம் நிலை வீராங்கனை மரியா சக்காரி (கிரீஸ்) கரோலினா முச்சோவாவிடம் (செக்குடியரசு) அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்
க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு