Published:Category:

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

#MIvDC

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது தாக்குதல் - நபர் பலி

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில்  காவலாளி பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
 
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றி வரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த  67  வயதுடைய சி.எம். இப்ராஹிம்  என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

அவரின் தலைப்பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

" அதிகாலை ஒரு மணியளவில் சுவர் ஏறி குதித்து பள்ளிவாசலுக்கு வந்த நபரொருவர், காவலாளியின் ஓய்வறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெளியே வந்து உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றுள்ளார்." என ஹட்டன் பள்ளிவாசலின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவே காவலாளி நியமிக்கப்பட்டார் என்று கூறியுள்ளனர்.

நபர் பள்ளிக்குள் வருவது, உண்டியலை உடைப்பது போன்ற காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

ஸ்தல பரிசோதனையின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கொலையாளியை கைது செய்வதற்கான விசாரணை, தேடுதல் வேட்டையில் ஹட்டன் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

#MIvDC

எம்.பி ஒருவர் பயணித்த கார் விபத்து; ஒருவர் படுகாயம்

Published:Category:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

#MIvDC

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Published:Category:

UPI முறை இன்று அறிமுகம்

#MIvDC

UPI முறை இன்று அறிமுகம்

Published:Category:

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

#MIvDC

இன்று முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

Published:Category:

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

#MIvDC

நடிகை ரூபிணியா இது? இப்படி ஆளே மாறிவிட்டார்?

Published:Category:

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

#MIvDC

இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

Published:Category:

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

#MIvDC

மக்களுக்கு அடித்த ஜாக்பாட் சேமிப்பு திட்டம்!

Published:Category:

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

#MIvDC

சிக்கிக்கொள்ளும் சிறுசுகள்! மக்களே உஷார்!

Published:Category:

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

#MIvDC

4000 பேருந்து வந்தாச்சு! எப்போது?

Published:Category:

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

#MIvDC

சிறையிலே கப்பமாகும் பெண் கைதிகள்!

  • Thedipaar